மண்பாண்ட தொழிலாளர் மாநில செயற்குழு
மதுரை: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம், அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம், தலைவர் நாராயணன் தலைமையில் நடந்தது. பொங்கல் தொகுப்புடன் புதிய பானை, அடுப்பு வழங்க வேண்டும். மழைக்கால நிவாரண உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மண்பாண்டங்களில் சமைப்பதன் நலன் குறித்து பாடபுத்தகங்களில் குறிப்பிட வேண்டும். குலாலர் குலத்தலைவர்களான மாவீரன் சாலிவாகனன், திருநீலகண்ட நாயனார், மதுரை சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி, சங்ககால புலவர் வெண்ணிக்குயத்தியார், மகாகவிகள் கம்பதாசன், சர்வக்ஞர், கோரக்கும்பர் ஆகியோருக்கு அரசு சார்பில் நினைவு மண்டபம் கட்டி சிலை எழுப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணைத் தலைவர் வீரையா, துணை செயலாளர் கருணாகரன், மாவட்ட தலைவர் மாணிக்கம், செயலாளர் கருப்புராஜா, பொருளாளர் மூர்த்தி, இளைஞரணி தலைவர் ராஜா, மகளிரணி தலைவி காளீஸ்வரி, மண்டலத் தலைவர் பாஸ்கரன் பங்கேற்றனர்.