உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் விசாரணை கைதி தப்பி ஓட்டம்

மதுரையில் விசாரணை கைதி தப்பி ஓட்டம்

மதுரை: மதுரையில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிவகங்கை கைதி ஆனந்த் 29, போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடினார். மதுரை கரிமேட்டைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் மீது பல திருட்டு வழக்குகள் உள்ளன. இவரை நகை திருட்டு வழக்கு ஒன்றில் சிவகங்கை மாவட்டம் சாலைகிராமம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருடிய நகைகளை மதுரை நகைக்கடை பஜாரில் உள்ள ஒரு கடையில் விற்றதாக விசாரணையில் தெரிவித்தார். நகைகளை மீட்பதற்காக அவரை போலீசார் காவலில் எடுத்தனர். நேற்றுமுன்தினம் மாலை ஆனந்தை, மதுரை நகைக்கடை பஜாருக்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது கடையை தேடுவது போல் நடித்து திடீரென ஓட்டம் பிடித்து தலைமறைவானார். ஆனந்த் தப்பி ஓடியது குறித்து நேற்று மாலை வரை சம்பந்தப்பட்ட தெற்குவாசல் போலீசில் சாலைகிராமம் போலீசார் புகார் செய்யாமல் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை