விளைபொருள் தரம் பிரித்தல் பயிற்சி
மதுரை: மதுரை மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் அட்மா திட்டத்தில் விளைபொருட்களை தரம் பிரித்தல், பகுப்பாய்வு செய்தல் தொடர்பான பயிற்சி நடந்தது.துணை இயக்குநர் மெர்ஸி ஜெயராணி பேசுகையில், ''உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதால் வாழை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்'' என்றார்.மதுரை விற்பனைக்குழு செயலாளர் அம்சவேணி பேசுகையில், ''விவசாயிகள் தமது விளைபொருட்களை நல்ல விலையில் விற்க மத்திய அரசின் இ - நாம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அக்மார்க் தரம் பிரிப்பு மற்றும் பகுப்பாய்வு செய்தால் விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யலாம்'' என்றார்.விற்பனை மற்றும் ஆய்வு செய்தல் துறை விற்பனை அலுவலர் வேணுகோபால் ரெட்டி, 'வேளாண் விற்பனை உட்கட்டமைப்பு நிதியின் பயன்களை' விளக்கினார். அக்மார்க் ஆய்வக வேளாண்மை அலுவலர்கள் பாத்திமாகனி, மலர்விழி, விற்பனை கூட பகுப்பாய்வாளர் ராஜா, வேளாண்மை அலுவலர் சித்தார்த் பங்கேற்றனர். விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.