சொத்து கேட்டு மறியல்
உசிலம்பட்டி: செக்கானுாரணி அருகே தேங்கல்பட்டியைச் சேர்ந்தவர் சிவசக்தி 55. பெற்றோரின் சொத்தில் இருந்து தனக்கு இரு சகோதரர்கள் பங்கு தரமறுப்பதாக போலீசில் புகார் அளித்தார். சகோதரர்களில் ஒருவர் போலீசாக இருப்பதாக தீர்வு கிடைக்கவில்லை எனக்கூறி நேற்று குடும்பத்தினருடன் வத்தலக்குண்டு ரோட்டில் 10 நிமிடம் மறியல் செய்தார். போலீசார் சமரசம் செய்தனர்.