மேலும் செய்திகள்
ரோடு மறியல்
23-Oct-2024
திருமங்கலம் : திருமங்கலம் ஒன்றியம் கிண்ணிமங்கலம் ஊராட்சி விரிவாக்கப்பகுதியான கே.எஸ்.நகருக்கு ரூ. 50 லட்சம் மதிப்பீட்டிலும், வி.ஐ.பி., நகருக்கு ரூ. 46 லட்சம் மதிப்பீட்டிலும் ரோடு அமைக்க 100 நாள் வேலை திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டது.இந்நிலையில் இப்பகுதிக்கு ரோடு அமைக்கக் கூடாது எனவும், ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் முதலில் ரோடு வசதி செய்து தர வேண்டும் எனவும் கூறி ஊராட்சி உறுப்பினர் ஒருவர், ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் துணை பி.டி.ஓ., குமரவேல் தலைமையில் அதிகாரிகள் 2 நாட்களுக்கு முன்பு அங்கு ஆய்வு செய்தனர். ரோடு அமைக்கலாம் என அறிக்கை அளித்தனர். இந்நிலையில் ரோடு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் நேற்று உடனே வேலையை தொடங்க வேண்டும் எனக் கூறி செக்கானுாரணி - திருமங்கலம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். ஊராட்சித் தலைவர் மயில் முருகன், செக்கானுாரணி போலீசார், ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் கலைந்து சென்றனர்.
23-Oct-2024