உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.1.46 கோடியில் நலத்திட்டங்கள் வழங்கல்

ரூ.1.46 கோடியில் நலத்திட்டங்கள் வழங்கல்

மதுரை : மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் தியாகராஜன் ரூ.1.46 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், திட்டப் பணிகளை துவக்கியும் வைத்தார்.முதல்வர் ஸ்டாலின், அமைச்சர், மறைந்த அமைச்சர் பழனிவேல்ராஜன் ஆகியோர் பிறந்த நாளை முன்னிட்டு தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளில் பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். 51 வது வார்டில் புதிய பேவர் பிளாக் ரோடுகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். ஆரப்பாளையம் முதல் ஊட்டி வரை செல்லும் அரசு புதிய பஸ் வழித்தடத்தை கொடியசைத்து துவக்கினார்.வெள்ளிவீதியார் உள்ளிட்ட மாநகராட்சி பள்ளிகளில் புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார். 57வது வார்டில் புதிய சிமென்ட் ரோட்டை திறந்து வைத்தார். புட்டுத்தோப்பு பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனங்கள், பெண்கள்களுக்கு திருமண நிதியுடன் தாலிக்கு தங்கம் உட்பட ரூ.1.46 கோடியில் 315 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்டங்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சிகளில் கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார், ஆர்.டி.ஓ., ஷாலினி, மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, கவுன்சிலர்கள் ஜெயராம், விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ