உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயிலில், அனைத்திந்திய கார்டு கவுன்சில் மதுரைக் கோட்டம் சார்பில், தலைவர் முனீஸ்வரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உதவி கோட்டச் செயலாளர் மருதுபாண்டி முன்னிலை வகித்தார். அகவிலைப்படிக்கு ஏற்ப, 2024 ஜன., 1 முதல் 'ரன்னிங் அலவன்ஸ்' 25 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். 10 ஆண்டுகளாக பதவி உயர்வுக்காக காத்திருக்கும் தகுதியுள்ள அனைத்து ரயில் மேலாளர்களுக்கும் சம்பள விகிதம் உயர்த்தி வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். கோட்டச் செயலாளர் கார்த்திக், உதவிக் கோட்டத் தலைவர் கோபி, ஓய்வுபெற்ற ரயில் மேலாளர் சங்கத் தலைவர் வெங்கடாஜலபதி, செயலாளர் சசி, டி.ஆர்.பி.யூ., கோட்டத் தலைவர் கல்யாணசுந்தரம், செயலாளர் சங்கரநாராயணன், டி.ஆர்.இ.யூ., கோட்டச் செயலாளர் சிவகுமார், பொருளாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ