உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழையால் பரவுது காய்ச்சல் நடமாடும் மருத்துவ முகாம் துவக்கம்

மழையால் பரவுது காய்ச்சல் நடமாடும் மருத்துவ முகாம் துவக்கம்

மதுரை: வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மழைக்காலம் முடியும் வரை நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. மதுரையில் நேற்று 23 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 81 பேர் சிகிச்சையில் உள்ளனர். அக். 15ல் இரண்டு பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் குமரகுருபரன் கூறியதாவது: 'ப்ளூ' வகை காய்ச்சல் மதுரையில் பரவலாக உள்ளது. பறவை காய்ச்சல், கொரோனா தொற்று பதிவாகவில்லை. மாவட்டத்தில் 13 ஒன்றியங்கள், மாநகராட்சியில் ஒன்று வீதம் 14 நடமாடும் மருத்துவக் குழுக்களை (எம்.எம்.சி.,) அமைத்துள்ளோம். டாக்டர், நர்ஸ், சுகாதாரப் பணியாளர் அடங்கிய மருத்துவ குழுவினர் தினமும் மூன்று இடங்களில் முகாம் நடத்துவர். 14 குழுக்கள் மூலம் தினமும் 42 முகாம் நடத்தி காய்ச்சலை கண்டறிய உள்ளோம். மழைக்காலம் வரை முகாம்களை நடத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ