உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஸ்டாலினுக்கு மாற்று பழனிசாமி: சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

 ஸ்டாலினுக்கு மாற்று பழனிசாமி: சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியதாவது: இன்றைய சூழ்நிலையில் மக்களின் மனநிலையை பொறுத்தவரை தி.மு.க., வுக்கு மாற்றாக அ.தி.மு.க.,வைத் தான் பார்க்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினுக்கு மாற்றாக முன்னாள் முதல்வர் பழனிசாமியைத்தான் பார்க்கிறார்கள். ஸ்டாலின் வேண்டாம் என மக்கள் முடிவு எடுக்கும் போது பழனிசாமி வேண்டுமென்று இரட்டை இலைக்குத்தான் ஓட்டளிப்பார்கள். இதுதான் மக்களுடைய தீர்ப்பாக அடுத்தாண்டு நடக்கவுள்ள தேர்தலில் அமையப்போகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை