உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வின் ஓட்டு யாருக்கு ; செல்லுார் ராஜூ சஸ்பென்ஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வின் ஓட்டு யாருக்கு ; செல்லுார் ராஜூ சஸ்பென்ஸ்

மதுரை : ''ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வின் ஓட்டுகள் யாருக்கு செல்ல வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்,'' என, மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிடாத நிலையில் அந்த ஓட்டுகள் தனக்குதான் என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி கூறி வருகிறார்.இதுகுறித்து செல்லுார் ராஜூ கூறியதாவது: இடைத்தேர்தலில் அ.தி.மு.க., ஓட்டுகள் பிற கட்சிகளுக்கு கிடைக்காது. நாம் தமிழர் கட்சிக்கு அ.தி.மு.க., ஓட்டுகள் செல்லும் நிலை இல்லை. மக்கள் தான் எஜமானர்கள். அ.தி.மு.க., ஓட்டுகளை யாருக்கு செலுத்த வேண்டும் என அவர்கள் முடிவெடுப்பார்கள்.கடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டது. தி.மு.க., பாடுபட்டது. ஆடு, மாடுகளை அடைத்து வைப்பது போல மக்களை அடைத்து வைத்து ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இதையெல்லாம் பார்த்து தான் இம்முறை நாங்கள் களத்தில் நிற்கவில்லை என்றார்.

நோட்டாவுக்கு ஓட்டு

தேர்தலில் ஓட்டளிப்பது ஜனநாயக கடமை என்பதால் அ.தி.மு.க., போட்டியிடாத நிலையில் அக்கட்சியினரும், அதன் ஆதரவாளர்களும் யாருக்கு ஓட்டளிப்பது என்ற குழப்பம் நீடிக்கிறது. அ.தி.மு.க., ஆதரவு வேட்பாளர்கள்கூட களத்தில் இல்லாத நிலையில், 'யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை' என தெரிவிக்கும் வகையில் 'நோட்டா'வுக்கு ஓட்டளிக்க அ.தி.மு.க.,வினர் தயாராகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை