உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பலாத்காரம்: இருவருக்கு தண்டனை

பலாத்காரம்: இருவருக்கு தண்டனை

மதுரை : மதுரையில் கணவனை பிரிந்த ஒரு பெண் 2021 ல் உறவினர் வீட்டிற்கு டூவீலரில் சென்றார்.அவரை மேலமடை குருவி விஜய் 34, கார்த்திக் 31, பின்தொடர்ந்தனர். அப்பெண்ணை கத்தியை காண்பித்து மிரட்டி கடத்திச் சென்றனர். கேட்பாரற்று பழுதடைந்து நின்றிருந்த வேனிற்குள் வைத்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். இருவரையும் அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்தில் வைத்து விசாரித்தனர். அவர்கள் போலீசாரை தாக்க முயற்சித்தபோது துப்பாக்கிச்சூடு நடந்தது. குருவி விஜய், கார்த்திக்கிற்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை மகளிர் அமர்வு நீதிமன்ற நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ