நெய், தீப எண்ணெய் வரியை குறைங்க
மதுரை; நெய், தீப எண்ணெய்க்கான ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வேண்டும் என மதுரை எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் சங்கத்தலைவர் அருணாசலம், செயலாளர் கிருஷ்ணமூர்த்திகோரிக்கை விடுத்துள்ளனர். தீப எண்ணெய்க்கும், நெய்க்கும் தற்போது 12 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. இரண்டுக்கும் 5 சதவீத வரியாக குறைக்க வேண்டும். இதை தமிழக அரசு ஜி.எஸ்.டி., கவுன்சிலிடம் பரிந்துரைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.