திருமங்கலத்திற்கு விளாச்சேரி வழியாக பஸ் இயக்க கோரிக்கை
திருநகர்: மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து விளாச்சேரி வழியாக திருமங்கலத்துக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். விளாச்சேரியில் இருந்து பெரியார், அண்ணா பஸ் ஸ்டாண்டுகளுக்கு அரசு டவுன் பஸ் செல்கிறது. இங்கிருந்து அண்ணாநகர், திருநகரில் இருந்து விளாச்சேரி வழியாக கிருஷ்ணாபுரம் காலனிக்கு இயங்கிய அரசு டவுன்பஸ்கள் சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு விட்டன. விளாச்சேரியில் இருந்து கப்பலுார் தொழிற்பேட்டை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளுக்கு பலர் வேலைக்கு செல்கின்றனர். மாணவர்கள் பள்ளி, கல்லுாரிக்கு செல்கின்றனர். வெளியூர் வியாபாரிகள் பலர் விளாச்சேரிக்கு பொம்மை வாங்க வருகின்றனர். பொதுமக்களுக்கு போதிய பஸ்வசதி இல்லாததால், திருநகர் 3வது ஸ்டாப் அல்லது மூலக்கரைக்கு ஆட்டோக்களில் செல்கின்றனர். பணி முடித்து திரும்புவோர் ஷேர் ஆட்டோவில் விளாச்சேரி வரும் நிலை உள்ளது. எனவே விளாச்சேரியில் இருந்து பெரியார் பஸ்ஸ்டாண்டுக்கு கூடுதல் டவுன் பஸ் இயக்கவும், திருமங்கலத்தில் இருந்து மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் செல்லும் அரசு டவுன் பஸ்களில் காலை, மாலையில் விளாச்சேரி வழியாக ஒரு பஸ் இயக்கினால் வசதியாக இருக்கும் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.