ஓய்வு அலுவலர்கள் சங்க கூட்டம்
திருமங்கலம், : திருமங்கலம் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கக்கூட்டம் தலைவர் மகபூப்பாஷா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பழனிராஜ் வரவேற்றார். செயலாளர் ரகுநாதன் அறிக்கை வாசித்தார். பொருளாளர் பாலகிருஷ்ணன் வரவு செலவு அறிக்கை வாசித்தார். மாவட்ட தலைவர் ராமானுஜம், துணைத் தலைவர் ஜெயராமன், தமிழ்நாடு பணி நிறைவு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஓய்வூதிய இயக்குனரகம் உட்பட 3 துறைகளை கலைத்து கருவூல கணக்கு துறையுடன் தமிழக அரசு இணைத்ததை ஆட்சேபித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 70 வயது நிரம்பியதும் 10 சதவீதம்,80 வயது நிரம்பியதும் மேலும் 10 சதவீதம் வழங்கப்படும் என உறுதியளித்ததை இன்று வரை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணைச் செயலாளர் நடராஜன், அமைப்புச் செயலாளர் முருகேசன் செயற்குழு உறுப்பினர்கள் பாண்டி, காசிராஜன் உறுப்பினர்கள் வையத்துரை, கண்ணையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.