மேலும் செய்திகள்
நிர்வாகிகள் தேர்வு
24-Sep-2024
மேலுார்: மேலுார் அனைத்துத் துறை பணிநிறைவு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் சேவை மைய ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் தமிழையா தலைமையில் நடந்தது.தாசில்தார் செந்தாமரை, நகராட்சி தலைவர் முகமது யாசின், மாநில கரும்பு விவசாய சங்க துணைத் தலைவர் பழனிச்சாமி, விவசாய சங்க தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர். செயல் தலைவர் மணி, மாவட்ட நீதித்துறை பணிநிறைவுற்றோர் சங்க செயலாளர் பாஸ்கரன், சட்ட ஆலோசகர் ராதாகிருஷ்ணன், சங்க துணைத் தலைவர் சிதம்பரம் பங்கேற்றனர்.70 வயது நிரம்பியோருக்கு கூடுதல் ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் முழுமையான பயன் பெற வேண்டும் என பேசினர். முன்னாள் செயலாளர் துரைப்பாண்டியன், கவுரவ தலைவர் சுந்தரகுமார், நிர்வாகி வீரணன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். நிர்வாகி பாண்டி நன்றி கூறினார்.
24-Sep-2024