உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பேட்ச் ஒர்க் பணியால் விபத்து அபாயம்

பேட்ச் ஒர்க் பணியால் விபத்து அபாயம்

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் - ஊமச்சிக்குளம் ரோட்டில் தரமற்ற ரோடு பணியால் விபத்து அபாயம் உள்ளது.கடந்த ஜனவரியில் ஊமச்சிக்குளம் ரோட்டில் அச்சம்பட்டி அருகே குறிப்பிட்ட துாரத்திற்கு ரோடு அமைக்கும் பணி நடந்தது. தரமற்ற முறையில் நடந்த பணிகளால் 100 மீ., துாரத்திற்கும் மேலாக ரோட்டின் இடது ஓரம் விரிசல் விட்டு ஆங்காங்கே பழைய ரோடு வெளியே தெரிந்தது.புதிதாக அமைத்த தார் விலகி ரோட்டோரத்தில் அலைபோல் ஒதுங்கியது. இதனால் விபத்துகள் நடந்து வாகன ஓட்டிகள் சிரமங்களை சந்தித்தனர். இதனையடுத்து ஒரு வாரத்திற்கு முன்பு பள்ளம் ஏற்பட்ட ரோடு பகுதிகளை இயந்திரம் மூலம் சுரண்டி அப்புறப்படுத்தி உள்ளனர். இந்த பள்ளத்தில் செல்வதை தவிர்த்து இடது ஓரம் செல்ல வேண்டிய வாகனங்கள் வலது புறம் செல்வதால் எதிரே வரும் வாகனங்கள் நின்று செல்கின்றன. இருள் சூழ்ந்த இப்பகுதியில் இரவில் விபத்து அபாயம் உள்ளது. ரோடு பணிகளை தரமாக, விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை