உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மகாத்மா காந்தி நகரில் ரோடு, குடிநீர் திண்டாட்டம்

மகாத்மா காந்தி நகரில் ரோடு, குடிநீர் திண்டாட்டம்

மதுரை: மதுரை பீபிகுளம் பகுதியில் ரோடு உட்பட அடிப்படை வசதிகள் சரியில்லாததால் பொதுமக்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது.பீபிகுளம் முதல் கிருஷ்ணாபுரம் காலனி, மகாத்மா காந்தி நகர், பாரதி நகர் பகுதிகளில் மெயின் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. சீரற்ற ரோடால் வாகனங்களின் போக்குவரத்து சிரமமாக உள்ளது. இந்த ரோட்டில் வருமான வரித்துறை, சுங்கவரித்துறை, தபால் துறையின் மண்டல தலைமை அலுவலகம், உழவர் சந்தை, பள்ளிகள், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. மதுரையின் இரு அமைச்சர்களின் வீடு, தொகுதி இப்பகுதியைச் சேர்ந்ததாக உள்ளது. குடியிருப்பு பகுதிகளும் அதிகளவில் உள்ளதால் வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது.எனவே அவற்றின் சிரமத்தை உணர்ந்து ரோட்டை சரிசெய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரோடு தவிர, குடிநீர் பிரச்னையும் இப்பகுதியில் அதிகம் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர் வரவில்லை. அதேநிலைதான் பழைய திட்ட குழாய்களிலும் தண்ணீர் வரமறுக்கிறது என குடியிருப்போர் வேதனை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை