மேலும் செய்திகள்
திருநகரில் ரோடு சேதம்
22-Oct-2025
திருநகர்: தினமலர் செய்தி எதிரொலியாக மதுரை திருநகர் ஜோசப்நகர் பகுதியில் சேறும் சகதி யுமாக இருந்த ரோடுகளை சீரமைக்கும் பணி துவங்கியது. அப்பகுதி ரோடுகளில், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய பள்ளங்களை மீண்டும் சீரமைக்கவில்லை. ஏற்கனவே மேடு பள்ளங் களாக இருந்த நிலையில், சிலநாட்களாக பெய்யும் மழையால் ரோடு சேறும் சகதியுமாக மாறிவிட்டது. அப்பகுதி மக்கள் நடந்துகூட செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து கவுன்சிலர் சுவேதா மேற்கொண்ட நடவடிக்கையால், ரோடுகளை சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது.
22-Oct-2025