உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாவட்டத்தில் போக்குவரத்துத்துறைசார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் நேற்று துவங்கியது.மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இணை கமிஷனர் சத்தியநாராயணன் தலைமையில் ஆர்.டி.ஓ., (வடக்கு) சித்ரா முன்னிலையில், வாகன ஆய்வளர்கள் சரவணகுமார், உலகநாதன், முரளி, சம்பத்குமார், மனோகர் பங்கேற்றனர்.விபத்தை தவிர்க்கும் வகையில் பழநி பாதயாத்திரை பக்தர்கள், ஆட்டோ டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விளக்கினர்.இரண்டாம் நாள் ஆய்வின்போதும் மாட்டுத்தாவணியில் இருந்து மேலுார் செல்லும் ரோட்டில் விதிமீறி எதிர்திசையில் செல்லும் வாகனங்களையும், பாதசாரிகளையும் நிறுத்தி சாலைவிதிகளை கடைபிடித்து செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை