உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பீர் பாட்டிலால் முகம் சிதைத்து துாத்துக்குடியில் ரவுடி கொலை

 பீர் பாட்டிலால் முகம் சிதைத்து துாத்துக்குடியில் ரவுடி கொலை

துாத்துக்குடி: ரவுடியின் முகத்தை சிதைத்து கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். துாத்துக்குடி சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனு, 26. இவர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன. வெளி யூரில் வசித்து வந்த சீனு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நேற்று முன்தினம் துாத்துக்குடி வந்துள்ளார். நேற்றிரவு, சத்யாநகர் உப்பள பகுதிக்கு சென்று, அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் சிலருடன் மது குடித்தார். அப்போது தகராறு ஏற்பட்டதால் சிலர், பீர் பாட்டிலால் சீனுவின் தலையில் தாக்கியும், முகத்தை சிதைத்தும் கொலை செய்துவிட்டு தப்பினர். நேற்று காலை தகவ லறிந்த தென்பாகம் போலீசார், சீனுவின் உடலை மீட்டு, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ