உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒட்டன்குளத்தை பராமரித்து வசதிகள் ஏற்படுத்த வேண்டும் ரூ.ஒரு கோடி நிதி வீணாகுது

ஒட்டன்குளத்தை பராமரித்து வசதிகள் ஏற்படுத்த வேண்டும் ரூ.ஒரு கோடி நிதி வீணாகுது

வாடிப்பட்டி : 'ரூ.ஒரு கோடி மதிப்பில் உருவான வாடிப்பட்டி ஒட்டன்குளத்தை பராமரித்து, அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்' என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.வாடிப்பட்டி பேரூராட்சி தாதம்பட்டி ஒட்டன்குளத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.ஒரு கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்தது. பேரூராட்சியின் மையப்பகுதியில் உள்ள இக்குளத்தை சுற்றி எம்.எல்.ஏ., அலுவலகம், துணை சுகாதார நிலையம், அரசு பள்ளிகள், கோயில்கள், குடியிருப்புகள் உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு கோடியில் குளத்தை துார்வாரி, தடுப்புச் சுவர், பாதுகாப்பு வேலியுடன் 'பேவர் பிளாக்' கற்கள் பதித்து நடைபாதை அமைக்கப்பட்டது. அரசு ஆண்கள் பள்ளி மைதானத்தில் தேங்கும் மழைநீர் இந்த குளத்திற்கு வரும். மழை நேரத்தில் கழிவு நீரும் கலந்து, குளத்தில் ஆகாய தாமரை உள்ளிட்ட செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் குளம் கொசு உற்பத்தி மையமாக உள்ளது.கம்பியாலான பாதுகாப்பு வேலி திருடு போகிறது. மின்விளக்கு வசதி இல்லாததால் நடைப்பயிற்சி செல்ல தயங்குகின்றனர். மது, கஞ்சா குடிக்கும் பாராகவும், திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தப்படுகிறது.குளத்தின் வடக்கு திசையில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். தண்ணீர், மின் விளக்கு, ஓய்வெடுக்க இருக்கைகள், சிறுவர் விளையாட்டு பூங்கா அமைத்து பராமரித்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை