உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பல்கலையில் சம்பள பிரச்னை, கல்லுாரிகளில் புதிய பாடங்களுக்கு ஒப்புதல் பெறுவது போன்றவற்றிற்கு தீர்வு தேவை

பல்கலையில் சம்பள பிரச்னை, கல்லுாரிகளில் புதிய பாடங்களுக்கு ஒப்புதல் பெறுவது போன்றவற்றிற்கு தீர்வு தேவை

இப்பல்கலைக்கு உட்பட்டு 90க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன. ஆண்டுக்கு இரண்டு முறை கல்வி பேரவை, செனட் கூட்டங்கள் நடத்த வேண்டும். மாதம் ஒருமுறை சிண்டிகேட் உறுப்பினர்கள் கூட்டம் நடத்த வேண்டும்.இக்கூட்டங்கள் மூலம் பல்கலையில் மேற்கொள்ள வேண்டிய நிர்வாகம், கல்வி, ஆய்வு மேம்பாட்டிற்கான முடிவுகளுக்கு ஒப்புதல் பெற வேண்டும். பல்கலை, கல்லுாரிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உள்ள பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.இவ்வகை முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டங்கள் 7 மாதங்களாக நடக்கவில்லை. சிண்டிகேட் மட்டும் இரண்டு முறை ஆன்லைனில் நடந்தது.இதனால் பல்கலையில் நிலவும் சம்பள பிரச்னைகளுக்கு முடிவு மேற்கொள்ள முடியாமை, கல்லுாரிகளில் புதிய பாடங்களுக்கு ஒப்புதல், பருவத் தேர்வு நடத்துவதில் சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.பேராசிரியர்கள் கூறியதாவது: கல்லுாரிகளில் குறிப்பாக 10க்கும் மேற்பட்ட பாடங்கள் செனட், கல்விப் பேரவை ஒப்புதல் இல்லாமலேயே நடத்தப்பட்டு வருகிறது.அக்.28 ல் பருவ தேர்வுகள் துவங்க உள்ள நிலையில் இதுவரை மாணவர்கள் படித்து வரும் பாடங்களுக்கு உரிய அனுமதி கிடைத்தபாடில்லை. இதுபோல் பல்கலையில் பல்வேறு நிர்வாக பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.பல்வேறு கமிட்டிகளுக்கான ஒப்புதல் கிடைக்கவில்லை. மாணவர்கள் பாதிப்பதை தவிர்க்க புதிய பாடங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் 'கடமைக்காக' அக்.23ல் ஆன்லைனில் செனட், கல்வி பேரவை கூட்டம் 10 நிமிடங்கள் நடத்த அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
அக் 19, 2024 09:16

நானும் மதுரை பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு மத்திய அரசில் மேல் பதவியில் தலைமை விஞ்ஞானியாக பணிசெய்தென் ..இன்றைய பல்கலைக்கழக நிலையை என்னும்போது மனது வலிக்கிறது தீ ர்வு என்ன ???? தற்சமயம் ஒரு இந்திய அரசு ஐ ஏ எஸ் அதிகாரியாக நியமிப்பது மட்டுந்தான் அங்கு இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்வதற்கு இவரால் மட்டும்தான் முடியும்


புதிய வீடியோ