உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாய்க்கு உமிழ்நீர் சுரப்பி அறுவை சிகிச்சை

நாய்க்கு உமிழ்நீர் சுரப்பி அறுவை சிகிச்சை

மதுரை: மேலுாரைச் சேர்ந்த 11 வயதுடைய நாட்டு, பொமரேனியன் கலப்பின நாய்க்கு உமிழ்நீர் சுரப்பியில் அடைப்பு ஏற்பட்டு வீங்கியது. தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் உதவி டாக்டர்கள் மெரில்ராஜ், குருசாமி, பயிற்சி டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர்.டாக்டர் மெரில்ராஜ் கூறியதாவது: கழுத்தில் அணிவிக்கும் பெல்ட் இறுக்கமாக இருந்தாலும் பிற நாய்களுடன் சண்டையிடும் போது காயம் ஏற்பட்டாலோ, கிருமித்தொற்றாலோ உமிழ்நீர் சுரப்பி குழாயில் அடைப்பு ஏற்படலாம். இந்த நாயின் 11 வயது என்பது மனிதர்களின் 90 வயதிற்கு சமம் என்பதால் முதுமை ஒரு சவாலாக இருந்தது. ரத்த இழப்பு அதிகமாகும் வாய்ப்பும் இருந்தது. ரத்தஇழப்பை குறைப்பதற்காக 'எலக்ட்ரோ காட்ரி' இயந்திரத்தை பயன்படுத்தி உமிழ்நீர் சுரப்பி, உமிழ்நீர் சுரப்பி குழாய் இரண்டையும் அறுவை சிகிச்சை செய்து அகற்றினோம் என்றார். டாக்டர்களை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சுப்பையன் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை