உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சவுராஷ்ட்ரா கல்லுாரி சாம்பியன்

சவுராஷ்ட்ரா கல்லுாரி சாம்பியன்

திருப்பரங்குன்றம்: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான 'பி' மண்டல கூடைப்பந்து போட்டிகளில் சவுராஷ்ட்ரா கல்லுாரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. நக் அவுட் முறையில் நடந்த போட்டிகளில் 4 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா கல்லுாரி அணி 48 -- 34 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் விவேகானந்தர் கல்லுாரி அணியை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சவுராஷ்டிரா கல்லுாரி அணியினர் அதிகபட்சம் எபினேசர் 22 புள்ளிகளும், சண்முக பாண்டியன் 16 புள்ளிகளும் எடுத்தனர். இக்கல்லுாரி அணி 15 வது ஆண்டாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அணியினரை கல்லுாரிச் செயலாளர் குமரேஷ், நிர்வாகக் குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் ஸ்ரீநிவாசன், விளையாட்டு குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள் ஜெயந்தி, ஜீவப்பிரியா, பாலாஜி, செந்தில்குமார், விஷ்ணுப்பிரியா, உடற்கல்வி இயக்குனர் கணேசன், பேராசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை