உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

மதுரை: மதுரை கிழக்கு ஒன்றியம் இளமனுார் அருகே எல்.கே.பி., நகர் அரசு நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் நாகலட்சுமி தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் நுார் முகம்மது முன்னிலை வகித்தார். ஆசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர்தென்னவன் ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி துணைத் தலைவர் முருகேஸ்வரி, முன்னாள் மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். ஆசிரியர்கள் அருவகம், அனுசியா தொகுத்து வழங்கினர். ஆசிரியர் சித்ரா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ராஜவடிவேல் சுகுமாறன், மனோன்மணி, தமிழ்ச்செல்வி, அகிலா, அம்பிகா, சாந்தி, ராணி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை