உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

விவாத மேடை

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை சார்பில் விவாத மேடை நிகழ்ச்சி நடந்தது. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறைத் தலைவர் நாகசுவாதி வரவேற்றார். முதுகலை மாணவர்கள் இடையே இ காமர்ஸ் நன்மை, தீமை மற்றும் தொழில் முனைவோருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமை குறித்து விவாத மேடை நடந்தது. உதவிப் பேராசிரியர்கள் சண்முகப்ரியா, பாக்யலட்சுமி ஒருங்கிணைத்தனர்.

விவேகானந்தர் ஜெயந்தி

மதுரை: மதுரைக் கல்லுாரி மேல்நிலைப்பள்ளியில் சுவாமி விவேகானந்தரின் 123வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் பாலாஜி ராம் தலைமை வகித்தார். நேதாஜி சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். ஜே.சி.ஐ. ரத்தீஷ்பாபு பள்ளி வளாகத்தில் உள்ள விவேகானந்தரின் சிலைக்கு மாலை அணிவித்து பேசுகையில், 'விவேகானந்தரின் நினைவு நாளை போற்றுவதன் மூலம் அவர் வாழ்ந்த வாழ்க்கையை நாம் கடைபிடிக்க ஒரு வாய்ப்பாக அமைகிறது' என்றார். பசுமை இயக்கம் ராஜசேகர், நுகர்வோர் இயக்கம் கர்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு விவேகானந்தரின் கருத்துகள், வாழ்க்கை முறை எடுத்துக் கூறப்பட்டது.

சாரண, சாரணியர் கூட்டம்

உசிலம்பட்டி: நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் பாரத சாரண, சாரணியர் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் மாவட்ட முதன்மை கமிஷனர் சாய்சுப்புலட்சுமி தலைமையில் நடந்தது. செயலாளர் பரமசிவம் வரவேற்றார். பொருளாளர் சூசைமாணிக்கம் வரவு செலவு அறிக்கை வழங்கினார். தலைவர் ஜெகதீசன், சாரண ஆணையர் ஜான்கோயில் பிள்ளை, உதவி ஆணையர் முத்தழகு பேசினர். உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் சாரண, சாரணியர் இயக்கத்தின் பொன்விழாவை கொண்டாடுவது, அனைத்து வகையான பள்ளிகளிலும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் படை நடத்த வேண்டும், ஆசிரியர்களுக்கான அடிப்படை பயிற்சி முகாமிற்கு அனைத்து பள்ளிகளில் இருந்தும் பொறுப்பாசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சிபெற தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர். சாரண பயிற்சி ஆணையர் இசக்கியம்மாள் நன்றி கூறினார். அமைப்பு ஆணையர் வேல்முருகன் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !