முப்பெரும் விழா
மதுரை: மதுரைக்கல்லுாரி மேல்நிலைப்பள்ளியில் தேசிய இளைஞர் தினம், விவேகானந்தர் பிறந்தநாள் விழா, தகவல் பலகை வழங்கும் விழா என முப்பெரும் விழா நடந்தது. தலைமையாசிரியர் ரவி தலைமை வகித்தார். நேதாஜி சுவாமிநாதன், ரத்தீஸ்பாபு முன்னிலை வகித்தனர். தாளாளர் பார்த்தசாரதி விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்தார். முன்னாள் தலைமையாசிரியர் முருகேசன், ராஜா, உரத்த சிந்தனை உதயம்ராம், இல.அமுதன், சுப்பையா, காந்திய கல்வி, ஆராய்ச்சி மைய முதல்வர் தேவதாஸ், பேராசிரியர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.முன்னாள் விமான படை வீரர் வேலுச்சாமி தினமும் ஒரு வழிகாட்டி தகவல் பலகையை திறந்து வைத்தார். ஆசிரியர் பாலா நன்றி கூறினார். தேசிய இளைஞர் தின விழா
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் ராஜேந்திரபாபு குடும்பத்தினர் அறக்கட்டளை சார்பில் பொங்கல் விழா, தேசிய இளைஞர் தினவிழா நடந்தது.முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் ராஜகோபால், உப தலைவர் ஜெயராமன், செயலாளர் விஜயராகவன், உதவிச் செயலாளர் ராஜேந்திரபாபு, பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர். பேராசிரியர் விஷ்ணு சுபா வரவேற்றார். கொடைக்கானல் தெரசா மகளிர் பல்கலை துணைவேந்தர் கலா பேசினார். பல்கலை இணைப்பேராசிரியர் ஜெயப்பிரியா உட்பட பலர் பங்கேற்றனர். தமிழ்த்துறைத் தலைவர் பரிமளா நன்றி கூறினார். விவேகானந்தர் பிறந்தநாள்
சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் தேசிய இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது. முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்து அச்சம் தவிர் என்ற தலைப்பிலும், குலபதி அத்யாத்மனந்த விவேகானந்தரின் பன்முக தன்மைகள் குறித்தும் பேசினர். செயலர் வேதானந்த முன்னிலை வகித்தார். விவேகானந்தர் படிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் முருகன் வரவேற்றார். விவேகானந்தர் குறித்து மாணவர்கள் ராஜா, ஜெய்குரு பேசினர். முன்னாள் வரலாற்று துறை தலைவர் நாகேந்திரன், உதவி பேராசிரியர்கள் குமரேசன், பாலமுருகன் துணை முதல்வர் கார்த்திகேயன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜெய்சங்கர், அகத்தர மைய ஒருங்கிணைப்பாளர் சதீஷ் பாபு மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.மதுரை:மதுரை சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரியில் யோகா மன்றம், டிப்ளமோ இன் யோகா இணைந்து 2024ல் வளர்ச்சி திட்டம் என்ற தலைப்பிலான கருத்தரங்கு நடந்தது. விரிவுரையாளர் பூம்பாவை வரவேற்றார். முதல்வர் (பொறுப்பு) கவிதா தலைமை வகித்தார். பிரானிக் ஹீலிங் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா கரிக்கோல்ராஜ் பிரானிக் ஹீலிங் பயன்கள் குறித்து விளக்கினார். வளர்ச்சி திட்டத்திற்கான அறிக்கையும் வழங்கினார். உதவி பேராசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.