மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
14-Oct-2025
பாலமேடு: பாலமேடு பத்திரகாளியம்மன் மெட்ரிக் பள்ளியின் 37ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுரேஷ், செயலாளர் சேகர், பொருளாளர் முருகவேல் முன்னிலை வகித்தனர். இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத் தலைவர் ஜோதி தங்கமணி, துணைத் தலைவர் தவமணிகுமார், செயலாளர் மயில்வாகனன், பொருளாளர் தனசேகரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் ரதிபிரியா வரவேற்றார். என்.டி.சி.,நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் ராஜ், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மதுரை மண்டல துணைத் தலைவர் ஜெபானந்த் ஜூலியஸ் பேசினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
14-Oct-2025