உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சீமைக்கருவேலம் அகற்றும் பணி மந்தம்

சீமைக்கருவேலம் அகற்றும் பணி மந்தம்

பேரையூர்: சீமைக் கருவேல மரங்களுக்கு விலை கிடைக்காததால் அவற்றை அகற்றும் பணி மந்த கதியில் நடக்கிறது.பேரையூர் பகுதியில் எங்கு பார்த்தாலும் சீமைக் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. வறட்சியிலும் இவை பசுமை மாறாமல் உள்ளன. இம்மரங்களால் நிலத்தடி நீர் வீணாக உறிஞ்சப்படுவதுடன், நீர்வளம் குறைய காரணமாக உள்ளன. தற்போது கருவேலம் மரங்களுக்கு கட்டுப்படியான விலை இல்லாததால், மரம் வெட்டுவோர் அதை வாங்கி ஆட்களை வைத்து வெட்டி எடுக்க மறுக்கின்றனர்.இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: ஐந்து டன் மரத்தை இயந்திரத்தை வைத்து அப்புறப்படுத்த ரூ. 6000, தொழிலாளர்களுக்கு ரூ.7 ஆயிரம், லாரி வாடகை ரூ.8 ஆயிரம் என அதிக செலவு பிடிக்கிறது. இது மட்டுமின்றி மரத்தை விற்கும் விவசாயிகளுக்கும் விலை தரவேண்டும். கூட்டிக் கழித்து பார்த்தால் நமக்கு நஷ்டமே, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !