உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மூக்கையாத்தேவர் மணி மண்டப இடம் தேர்வு: அமைச்சர் ஆய்வு

மூக்கையாத்தேவர் மணி மண்டப இடம் தேர்வு: அமைச்சர் ஆய்வு

உசிலம்பட்டி : மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மறைந்த பா.பி., தலைவர் மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.அதற்காக தற்போது தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்படும் அரசினர் குடியிருப்பு, பழைய அரசு மாணவர் மேல்நிலைப்பள்ளி, கள்ளர் மாணவர் விடுதிகள் இருந்த பகுதி உள்ளிட்ட சில இடங்களை அதிகாரிகள் தேர்வு செய்திருந்தனர். இவற்றில் மூக்கையாத்தேவர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் படித்த அரசு மாணவர் மேல்நிலைப்பள்ளி, விடுதி இருந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த இடத்தை நேற்றிரவு அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, டி.ஆர்.ஓ., அன்பழகன், ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல், தாசில்தார் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு செய்தனர். மணிமண்டபம் முன் மூக்கையாத்தேவர் சிலை, மாணவர்களுக்கு படிப்பகம், திருமண மண்டபம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டுவதற்கான வசதிகள் குறித்து அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், துணை செயலாளர் பாலாஜி, நகர் செயலாளர் தங்கப்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அஜித்பாண்டி, பழனி, முருகன், முத்துராமன், சுதாகரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை