உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முரண்பாடான கட்சிகள் கூட அ.தி.மு.க., கூட்டணிக்கு வரும் செல்லுார் ராஜு நம்பிக்கை

முரண்பாடான கட்சிகள் கூட அ.தி.மு.க., கூட்டணிக்கு வரும் செல்லுார் ராஜு நம்பிக்கை

மதுரை, : ''முரண்பாடான கட்சிகள் கூட, அ.தி.மு.க., கூட்டணிக்கு வரும்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு கூறினார். அவர் அளித்த பேட்டி: கூட்டணி என்பது இறுதிக்கட்டத்தில் தான் முடிவாகும். அ.தி.மு.க., - தி.மு.க.,வில் அப்படித்தான் எப்போதும் நடக்கும். ஓட்டுகள் சிதறாமல் இருக்க, கூட்டணியை அ.தி.மு.க., பலப்படுத்தி வருகிறது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு கூடும் கூட்டத்தை பார்த்தால், 2026-ல் அவர் முதல்வராவது உறுதியாகி விட்டது. 'பெரிய பெரிய கட்சிகளோடு பேசுகிறோம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்' என பழனிசாமி கூறியுள்ளார். கடந்த 1967 தேர்தலில், மா.கம்யூ., - இ.கம்யூ., முஸ்லிம் லீக் மற்றும் ராஜாஜியின் சுதந்திரா கட்சி உள்ளிட்ட முரண்பாடான கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தன. தேர்தல் நெருக்கத்தில், 'சீட்' பேரம், கேட்ட தொகுதிகள் கிடைக்காமல் போகலாம்; கூட்டணி மாறலாம். இதுபோல் நிறைய விஷயங்கள் உள்ளன. எனவே, முரண்பாடான கட்சிகள் கூட, அ.தி.மு.க., கூட்டணிக்கு வரும். தேர்தல் நேரத்தில் தான் எல்லாமே முடிவாகும். முதல்வர் ஸ்டாலினை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் எத்தனை முறை சென்று பார்த்தாலும், அது அவருடைய விருப்பம். அதற்காக, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பின், அவரது நிலைமை பாவமாக இல்லையா என கேட்பது சரியல்ல. ஒரு தலைவரை அப்படி எல்லாம் விமர்சிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை