உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புதிய மேயரை தேர்வு செய்யாதது மதுரைக்கு ஏற்பட்ட சோதனை சொல்கிறார் செல்லுார் ராஜூ

புதிய மேயரை தேர்வு செய்யாதது மதுரைக்கு ஏற்பட்ட சோதனை சொல்கிறார் செல்லுார் ராஜூ

மதுரை, அக்.27- ''மாநகராட்சியின் புதிய மேயரை தேர்வு செய்யாதது, மதுரைக்கு ஏற்பட்ட சோதனை''என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது: மதுரை தெப்பக்குளத்தில் மருது பாண்டியர்கள் சிலைக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அக். 30ல் மரியாதை செலுத்துகிறார். பின் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பங்கேற்கிறார். எதிர்க்கட்சி தலைவர் பணியை பழனிசாமி சிறப்பாக செய்கிறார். தி.மு.க.,விற்கு டெல்டா மக்கள் தக்க பதிலடி கொடுப்பர். மதுரை மக்கள் பிரச்னைகளை சட்டசபையில் பேசிய போது, அமைச்சர் மூர்த்தி சிரித்துக் கொண்டிருந்தார். தி.மு.க.,விற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளதால் அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிடுகின்றனர். வரும் தேர்தலில் மதுரையின் 10 சட்டசபை தொகுதிகள் உட்பட தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சிஅமைக்கும். அ.தி.மு.க.,வை யாரும் அடிமைப்படுத்த முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் பழனிசாமி செயல்படுகிறார். கூட்டணி குறித்து பழனிசாமி முடிவே அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு. திருமாவளவனால் வி.சி.க., வினரையே ஒருமுகப்படுத்த முடியவில்லை. அவரே மாற்றி மாற்றி பேசுகிறார். அரசியல் அடையாளத்துக்காக பேசும் தினகரனை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. பீட்டர் அல்போன்ஸ் யார் என்று எனக்கு தெரியாது. த.வெ.க., புதுக்கட்சி என்பதால் அதன் செயல்பாடுகளுக்கு கருத்து சொல்வது சரியல்ல. த.வெ.க.,வை தி.மு.க., வளர விடாது என்பதால் தி.மு.க.,வுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும். மதுரை மாநகராட்சியில் 69 கவுன்சிலர்களை வைத்துள்ள தி.மு.க.,வால் மேயரை தேர்வு செய்ய முடியவில்லை. இதனால் நிர்வாகம் ஸ்தம்பித்து செயல்படாமல் உள்ளது. அதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் கலக் ஷன், கரப்ஷனாக இருப்பதே காரணம். புதிய மேயர், மண்டலத் தலைவர்கள், நியமனக்குழு தலைவர்களை தேர்வு செய்ய முடியாதது மதுரைக்கு ஏற்பட்ட சோ தனை. இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை