மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
02-Feb-2025
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி இயற்பியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் ஆற்றல் சேமிப்பு பொருட்கள் மற்றும் நானோ தொழில்நுட்பம் குறித்த சர்வதேச கருத்தரங்கு நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். துறைத் தலைவர் ஜெயபாலகிருஷ்ணன் வரவேற்றார். கோவை அமிர்தா விஸ்வ வித்யா பீடத்தின் இணை பேராசிரியர் உலகநாதன், கொரியா சுங்குய்வான் பல்கலை பேராசிரியர் சமந்த், இந்திய தொழில்நுட்ப கழக ஆராய்ச்சியாளர் கதிர்வேல் பேசினர். 180 மாணவர்கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இயற்பியல் துறை பேராசிரியர்கள் சங்கீதா, தனலட்சுமி, வேதியியல் துறை தலைவர் லட்சுமி கிருத்திகா ஒருங்கிணைத்தனர். 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
02-Feb-2025