கல்லுாரியில் கருத்தரங்கு
மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லுாரி சமயம், தத்துவம் மற்றும் சமூகவியல்துறை சார்பில், 'இந்தியாவில் சட்டம், சமூக மாற்றங்கள்,' தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது. முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். உத்தர்காண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி குகநாதன் நரேந்தர், 'சமகாலத்திற்கேற்ப பொருத்தமான தலைப்பில் கருத்தரங்கு நடக்கிறது'' என்றார். பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்க 'அவளின் அமைதி' தலைப்பில் விழிப்புணர்வு இயக்கத்தை அவர் துவக்கி வைத்தார். கல்லுாரி துறைத் தலைவர் அருளப்பன், உதவி பேராசிரியர் அனுரமா, 'கைரோ' இந்தியா நிறுவன நிறுவனர் அபிஷேக் ஆசிர் பங்கேற்றனர்.