உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரோட்டில் தேங்கும் கழிவுநீர்

ரோட்டில் தேங்கும் கழிவுநீர்

திருநகர்: திருநகரில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.திருநகர் ஆறாவது பஸ் ஸ்டாப் அருகே பசும்பொன் வடக்கு தெருவில் அச்ச முத்தம்மன் கோயில் பின்பகுதியிலுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் நிரம்பி ரோட்டில் தேங்கி நிற்கிறது. ஆண்டு முழுவதும் அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அதில் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன.அப்பகுதியில் நடந்து செல்வோர் அந்த கழிவு நீரில் மிதித்தே செல்கின்றனர். அப்பகுதி கழிவுநீர் கால்வாயை சீரமைத்து பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை