உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பண்ணைக்குடியில் நாறுது குடிநீர்

பண்ணைக்குடியில் நாறுது குடிநீர்

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் பண்ணைக்குடியில் ஊரா ட்சி நிர் வாகத் தால் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. முதல் அரை மணி நேரத்திற்கு நாற்றமடித்து துர்நாற்றம் வீசும் கழிவு நீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ராமசாமி: சில மாதங்களாக குடிநீர் குழாய்களில் நாற்றமடிக்கும் நீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மக்கள் இந்த நீரை பயன்படுத்த முடியாததால் விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. குழாயில் கழிவு நீர் கலக்கும் இடத்தை கண்டுபிடித்து உடனடியாக சீரமைக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ