உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சமூக விழிப்புணர்வு திட்ட நிகழ்ச்சி

சமூக விழிப்புணர்வு திட்ட நிகழ்ச்சி

மதுரை: மதுரை லட்சுமி பள்ளியின் வெள்ளி விழாவை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு திட்ட நிகழ்ச்சி நடந்தது. 'இயல்பான இனிமையான வாழ்க்கை இணையத்திற்கு வெளியே' என்ற தலைப்பில் ஆக.23ல் மதுரை ஹார்லிராம் மருத்துவமனை, ஆக.26 அப்பல்லோ பெண்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு மருத்துவமனை செப்.18ல் பாரதி மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குழந்தைகளிடையே அலைபேசி அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. கர்ப்பிணிகள், இளம் தாய்மார்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ