உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 24 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் உடல்அடக்கம்

24 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் உடல்அடக்கம்

எழுமலை: எழுமலை அருகே எம்.எஸ். புரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இன்பராஜாவை 26, அவரது சொந்த கிராமத்தில் 24 குண்டு முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.எம்.கல்லுப்பட்டி அருகே எம்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ராமர் - வனத்தாய் தம்பதியரின் மகன் இன்பராஜா 26. 2016ல், இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். அஸ்ஸாம் மாநிலம் நிஹாம்பள்ளி முகாமில் பணிபுரிந்தார். டிச.22, பகல் 12:30 மணிக்கு ராணுவ வீரர்களுக்கான உணவை வாகனத்தில் கொண்டு சென்றார். திடீரென அந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இன்பராஜா உயிரிழந்தார். ஏழு மாதங்களுக்கு முன்புதான் அவருக்கு ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.இவரது உடலை அடக்கம் செய்ய சொந்த ஊரான எம்.எஸ்.புரத்திற்கு நேற்று காலை 10:15 மணிக்கு கொண்டு வந்தனர். அவரது வீட்டில் பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தியபின், மயானத்திற்கு கொண்டு சென்றனர். அவரது உடலுக்கு தமிழ்நாடு 28 என்.சி.சி., விருதுநகர் பட்டாலியன் கர்னல் ராகேஷ்குமார், கோவை பட்டாலியன் வீரர்கள், மதுரை கலெக்டர் சங்கீதா, உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல், டி.எஸ்.பி., செந்தில்குமார், சேடபட்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ஜெயச்சந்திரன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் அஜித் பாண்டி, செல்வபிரகாஷ் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து 24 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை