தென்தமிழக ஹாக்கி போட்டி
மதுரை: மதுரை எல்லீஸ்நகர் ஹாக்கி அகாடமி சார்பில் தென்தமிழக அளவிலான 15 வயதுக்குட்பட்ட ஆடவர் பிரிவுக்கான ஒருநாள் ஹாக்கி போட்டி எல்லீஸ்நகர் ஹாக்கி மைதானத்தில் நடந்தது. 10 அணிகள் பங்கேற்றன.இந்திய விளையாட்டு வீரர் வாமன் போட்டிகளை துவக்கி வைத்தார்.முதல் அரையிறுதியில் ராமநாதபுரம் சையது அம்மாள் ஹாக்கி அகாடமி 5 - 0 கோல் கணக்கில் வாடிப்பட்டி எஸ்.டி.டி.சி., அணியை வீழ்த்தியது. அடுத்த அரையிறுதியில் எல்லீஸ்நகர் ஹாக்கி அகாடமி அணி 2 - 1 கோல் கணக்கில் சிவகங்கை செயின்ட் ஜோசப் அகாடமி அணியை வீழ்த்தியது.இறுதிப்போட்டியில் சையது அம்மாள் அணி 3 - 0 கோல் கணக்கில் எல்லீஸ்நகர் அணியை வீழ்த்தியது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் கண்ணன் பரிசு வழங்கினர்.