மதுரை, : பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்கள் மூலம் வழக்கமான வழித்தட பஸ்களும், சென்னைக்கு பண்டிகைக்கு முன் ஜன.11 முதல் 14 வரை 365 பஸ்கள், பண்டிகைக்கு பின் ஜன.16 முதல் 18 வரை 359 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மதுரை, திண்டுக்கல், தேனி, பழநி, விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையத்தில் இருந்து சென்னை, திருச்சி, திருப்பூர், கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்துார், கம்பம், குமுளி என முக்கிய ஊர்களுக்கு தேவைக்கேற்பவும் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. www.tnstc.inஇணையதளம், மொபைல் ஆப் வழியாக டீலக்ஸ் பஸ்களில் முன்பதிவு செய்யலாம்.பயணிகளுக்கு உதவ முக்கிய பஸ்ஸ்டாண்ட்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மேலாண் இயக்குனர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.