சிறப்பு திட்ட முகாம்
பேரையூர்: பேரையூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் 400, பொதுவானவையாக 738 மனுக்கள் பெறப்பட்டன. தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மணிகண்டன், தாசில்தார் செல்லப்பாண்டி, பேரூராட்சி தலைவர் காமாட்சி, செயல் அலுவலர் மணிகண்டன் பங்கேற்றனர்.