மேலும் செய்திகள்
மதுரையில் குடியரசு தின கோலாகலம்
27-Jan-2025
மதுரை: மதுரை கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரியின் 42ம் மற்றும் கல்வியியல் கல்லுாரியின் 18ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லுாரி கவுன்சில் நிர்வாகக் குழு உறுப்பினர் குமரேஷ் பரிசு வழங்கினார்.பாலிடெக்னிக் கல்லுாரியில் தனி நபர் ஆடவர் பிரிவில் மிதுன், மகளிருக்கான பிரிவில் பிரியதர்ஷினி, கல்வியியல் கல்லுாரியில் தனி நபர் ஆடவர் பிரிவில் பாலதேசிகன், மகளிருக்கான பிரிவில் பிரியதர்ஷினி சாம்பியன் பட்டம் பெற்றனர்.முதல்வர்கள் ஆனந்தன், காளீஸ்வரி, கவுன்சில் உறுப்பினர்கள் முரளிதரன், மணிகண்டன், இன்ஜினியரிங் கல்லுாரி பொருளாளர் சிவபிரசாத், உறுப்பினர் பாலகிருஷ்ணன், பாலிடெக்னிக் துணை முதல்வர் சகாதேவன், வித்யாலயா பள்ளி முதல்வர் வேணி பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் சகாதேவன், ராஜா, நிர்வாக அதிகாரி ராஜபிரபு, மேலாளர் லட்சுமணன் செய்திருந்தனர்.
27-Jan-2025