கணித ஆசிரியருக்கு விளையாட்டுப் போட்டி
மதுரை: மதுரை மாவட்ட கணித ஆசிரியர்கள் சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கணித ஆசிரியர்களுக்கான ஆடவர், மகளிர் தடகள, கிரிக்கெட் போட்டிகள் மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் மே 10 முதல் 12 வரை நடக்கிறது.31 முதல் 60 வயது வரை 5 பிரிவுகளின் கீழ் 100 மீட்டர், 200, 300 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், தொடர் ஓட்டப் போட்டிகள் நடைபெறும். ஒருவர் 3 போட்டிகளில் பங்கேற்கலாம். அனைத்து வயதினரும் கிரிக்கெட், செஸ், வாலிபால் போட்டியில் பங்கேற்கலாம். முன்பதிவுக்கு ஆசிரியர் ராஜேஷ்குமாரை 88074 30087ல் தொடர்பு கொள்ளலாம்.