உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில ஹாக்கி போட்டிகள் திருநகரில் துவங்கியது

மாநில ஹாக்கி போட்டிகள் திருநகரில் துவங்கியது

திருநகர்: திருநகர் ஹாக்கி கிளப் சார்பில் அண்ணா பூங்காவில் பாலசுப்பிரமணியன், ஜெய்சிங், பழனி ஆண்டவர், மெய்யப்பன் நினைவு 26வது மாநில ஹாக்கி போட்டிகள் நேற்று துவங்கியது. நாக் அவுட் முறையில் நடக்கும் போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 30 அணிகள் பங்கேற்கின்றன. ஓய்வு போலீஸ் எஸ்.பி. மணிவண்ணன், கவுன்சிலர் சுவேதா துவக்கி வைத்தனர்.துவக்க ஆட்டத்தில் கோவில்பட்டி லாசா ஹாக்கி கிளப் அணி 2-1 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் புஷ்கரம் ஹாக்கி அகாடமி அணியை வென்றது. இரண்டாவது போட்டியில் திருப்பூர் சிக்கன்னா ஹாக்கி கிளப் அணி 2-0 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் பாண்டியாஸ் ஹாக்கி கிளப் அணியை வென்றது.3வது போட்டியில் நீலகிரி யுனைடெட் ஹாக்கி கிளப் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வாடிப்பட்டி ஹாக்கி டேலண்ட் டெவலப்மெண்ட் சென்டர் அணியை வென்றது. நான்காவது போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலை அணி 3-2 என்ற கோல் கணக்கில் தஞ்சாவூர் அணியை வென்றது.ஐந்தாவது போட்டியில் கோவில்பட்டி லாசா ஹாக்கி கிளப் அணி 2-0 என்ற கோள் வித்தியாசத்தில் கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி அணியை வென்றது. ஆறாவது போட்டியில் கிருஷ்ணகிரி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஹாக்கி கிளப் அணி 2-1 என்ற கோல் கணக்கில் நீலகிரி யுனைடெட் ஹாக்கி கிளப் அணியை வென்றது. ஒவ்வொரு போட்டியிலும் ஒரு அணியில் இருந்து சிறந்த வீரர் ஒருவரை தேர்வு செய்து பரிசு வழங்கினர். பிப். 16வரை போட்டிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி