உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில பல்திறன் போட்டிகள்

மாநில பல்திறன் போட்டிகள்

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர்கல்லுாரி சமூகப் பணித்துறை சார்பில் அனைத்து கல்லுாரிகளுக்கான மாநில கலைப் போட்டிகள் நடந்தன.முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவி பிரியதர்ஷினி வரவேற்றார். கலை நிகழ்ச்சி முக்கியத்துவம் குறித்து மாணவர் பாலவிஷ்ணு பேசினார்.35க்கும் மேற்பட்ட கல்லுாரிகளின் 700க்கும் மேலான மாணவர்கள் தனித் திறமையை வெளிப்படுத்தினர். அதிக புள்ளிகள் பெற்ற மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்புராமன் மகளிர் கல்லுாரி முதல் இடம் பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. அருளானந்தர் கல்லுாரி 2 ம் இடம் வென்றது. வென்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினர்.சமூகப்பணித்துறை தலைவர் ராமச்சந்திரன், பேராசிரியர்கள் சிலம்பரசன், டயானா வின்சில்லா, கண்மணி, கிருஷ்ணவேணி, மரியா ஜஸ்டினா, சுபா பிரபா, கார்த்திகாயினி கலந்து கொண்டனர். மாணவர் ராஜேந்திர பிரசாத் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை