மாநில நீச்சல் போட்டி
மதுரை: திருநெல்வேலி நீச்சல் சங்கம் சார்பில் நடந்த மாநில நீச்சல் போட்டியில் 600 வீரர், வீராங்கனைகள் நீச்சல் வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் மதுரை நீச்சல் வீரர்கள் குரூப் 1 பிரிவில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவன் ஜஸ்வந்த் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.அதே பிரிவில் கேப்ரன்ஹால் பள்ளி மாணவி வர்ஷினி 200 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் தங்கம், நாகம்மையார் மாநகராட்சி பள்ளி மாணவி பூர்வஜா 200 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் வெள்ளி வென்றனர்.குரூப் 2 பிரிவில் மகாத்மா பள்ளி மாணவன் ஸ்ரீமுத்து 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் தங்கம்,100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் வெண்கலம் வென்றனர். நீச்சல் சங்க துணைத்தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், செயலாளர் கண்ணன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், விளையாட்டு அலுவலர்கள் ராஜா, கண்ணன், விளையாட்டு விடுதி மேலாளர் முருகன், பயிற்சியாளர்கள் பரங்குன்றம், செல்வபிரசன்னா பாராட்டினர்.