பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தம்
மேலுார்: மேலுார் ஒரு போக பாசனத்திற்கு செப்.15 ல் தண்ணீர் திறக்கப்பட்டது. 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்து என்ற அடிப்படையிலும் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. தண்ணீர் திறந்து 45 நாட்கள் முடிவடைந்த நிலையில் நேற்று நிறுத்தப்பட்டது.பிறகு நவ. 4 முதல் தண்ணீர் திறக்கப்பட்டு 5 நாட்கள் தண்ணீர் தரப்படும் என நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் தெரிவித்தார்.