மேலும் செய்திகள்
மதுரை மாணவிக்கு தங்கம்
08-May-2025
மதுரை; கேலோ இந்தியா சார்பில் பீஹாரில் நடந்த தேசிய நீச்சல் போட்டியில் மதுரை மாணவி ரோஷினி தங்கம் வென்றார்.இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். தமிழக அணியின் சார்பில் பங்கேற்ற மதுரை லீசாட்லியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ரோஷினி 200 மீட்டர் ஐ.எம்., பிரிவில் தங்கம் வென்றார். 4x100 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலே பிரிவில் தமிழக வீராங்கனைகள் தீக்க்ஷா, தயனிதா, ஸ்ரீநிதியுடன் சேர்ந்து வெண்கலம் வென்றார். மேலும் மரியா வின்ஷியா, பிரிக்ஷிதா, ஸ்ரீநிதியுடன் சேர்ந்து 4x100 ஐ.எம்., ரிலே பிரிவில் வெண்கலம் வென்றார்.மாணவியரை மாநில நீச்சல் சங்க துணைத் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, நீச்சல் சங்க செயலாளர் கண்ணன், பயிற்சியாளர் சதீஷ்குமார் பாராட்டினர்.
08-May-2025