விளையாட்டு விடுதிக்கான மாணவர்கள் சேர்க்கை
மதுரை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.,) சார்பில் 7 முதல் 9 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிக்கான சேர்க்கைக்கு மாணவர்கள் பங்கேற்கலாம்.மதுரை மாவட்ட அளவிலான தடகளம், கூடைபந்து, கால்பந்து, ஹாக்கி, கபடி, வாலிபால், கிரிக்கெட் பிரிவு மாணவர்களுக்கு மே 7 காலை 7:00 மணிக்கு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தேர்வு நடக்கிறது. கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளுக்கான மாணவிகள் தேர்வு மே 8 காலை 7:00 மணிக்கு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கிறது. பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, பள்ளிச் சான்றிதழ் நகலுடன் மே 5 க்குள் www.sdat.tn.gov.inஇணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மே 12ல் மாநில தேர்வு
மாநில அளவிலான வாள் சண்டை, ஜூடோ ஆடவர், மகளிர் பிரிவு, குத்துச்சண்டை ஆடவர் விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான நேரடி தேர்வு மே 12 காலை 7:00 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடக்க உள்ளது. அதேநாளில் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் ஆடவர், மகளிர் பளு துாக்குதல், ஆடவர் வூசூ தேர்வும், சென்னை வேளச்சேரி ஏ.பி.ஜி., காம்ப்ளக்ஸில் ஆடவர் மகளிர் நீச்சல் தேர்வும் நடக்க உள்ளது. மகளிர் குத்துச்சண்டை, ஆடவர் ஸ்குவாஷ் தேர்வு சென்னை நேரு உள் விளையாட்டரங்கிலும் ஆடவர் மல்யுத்தம், ஆடவர் மகளிர் டேக்வாண்டோ தேர்வு கடலுார் மாவட்ட விளையாட்டரங்கிலும், ஆடவர் மல்லர்கம்பம் தேர்வு விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கிலும் ஹேண்ட்பால் ஆடவர் தேர்வு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது. மே 13 காலை 7:00 மணிக்கு திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மகளிர் ஹேண்ட்பால் தேர்வு நடக்க உள்ளது. இத்தகவலை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.