உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களே கவனமாக இருங்கள் சைபர் குற்றங்கள் அதிகரிக்கிறது  மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

மாணவர்களே கவனமாக இருங்கள் சைபர் குற்றங்கள் அதிகரிக்கிறது  மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

மதுரை: சைபர் குற்றங்கள் அதிகரிப்பதால் மாணவர்கள் அலைபேசியை கவனமாக பயன்படுத்த வேண்டும் என மதுரை மாநகராட்சி கமிஷனர் சித்ரா தெரிவித்தார்.மாநகராட்சி, தியாகராஜர் பொறியியல் கல்லுாரி சார்பில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல் ஆலோசனை நிகழ்ச்சி தமுக்கத்தில் நடந்தது.இதில் கமிஷனர் பேசியதாவது: பிளஸ் 2 முடித்து நல்ல மதிப்பெண் பெறுவோர் மருத்துவம், பொறியியல் படிப்பை தேர்வு செய்வர். குறைவாக பெறும் மாணவர்கள் கவலை வேண்டாம். அதற்கு ஏற்ற படிப்புகள் ஏராளமாக உள்ளன. நன்றாக படித்தால் சாதிக்கலாம். அலைபேசி வைத்திருக்கும் மாணவர்களில் 10 சதவீதம் பேர்தான் படிக்க பயன்படுத்துகின்றனர். சைபர் குற்றங்கள் அதிகரிக்கின்றன. படிப்பு முடிக்கும் வரை கவனம் அவசியம் என்றார்.மேயர் பேசுகையில், மாணவர்கள் பலருக்கும் கலெக்டர், டாக்டர், இன்ஜினியர் கனவு இருக்கும். ஆனால் நீங்கள் எது நன்றாக படிக்க வரும் என்பதை தெரிந்து உயர்கல்வியை தேர்வு செய்யுங்கள். ஒரு நல்ல சமூகம் வகுப்பறையில் தான் கட்டமைக்கப்படுகிறது. ஒழுக்கத்துடன் கூடிய கல்வி அவசியம். நன்றாக படித்து சிறப்பான எதிர்காலத்தை பெறுங்கள் என்றார்.உயர்கல்வி குறித்து தியாகராஜர் கல்லுாரி பேராசிரியர்கள் திருவேங்கடம், பாலாஜி, பார்த்தசாரதி, மங்கையர்க்கரசி பொறியியல் கல்லுாரி பேராசிரியர் கார்த்திகேயன் பேசினர். துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் சரவணபுவனேஸ்வரி, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை